கொரோனா குறித்த கூட்டம் கொரோனாவால் ரத்து
சீனாவில் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 120-க்கும் அதிகமான நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 4 ஆயிரத்து 600-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1 லட்சத்து 25 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பரவியுள்ளது.
இந்த கொரோனா வைரஸ் தாக்குதலை குணப்படுத்த மருந்து கண்டுபிடிக்க அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டுவருகின்றனர்.
இதற்கிடையில், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை சர்வதேச நிடோவைரஸ் சிம்போசிசம் எனப்படும் விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு பரவும் வைரஸ் தாக்குதல்கள் குறித்து (கொரோனா உள்பட) கூட்டங்கள் உலகின் எதேனும் ஒரு நாட்டில் நடைபெறுவது வழக்கம்.
இந்த கூட்டத்தில் வைரஸ் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபடும் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளையும், ஆய்வு முடிவுகளையும் வெளியிடுவர்.
இந்நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அறிவியல் ஆராய்ச்சியாளர்களின் கூட்டம் இந்த ஆண்டு மே 10 முதல் 14-ம் தேதி வரை நெதர்லாந்து நாட்டில் நடைபெறுவதாக இருந்தது.
ஆனால், தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் இந்த கூட்டத்தில் பங்கேற்க அறிவியல் ஆராச்சியாளர்கள் அச்சம் தெரிவித்தனர்.
இதையடுத்து, வைரஸ் தொடர்பான ஆய்வு கூட்டம் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்படுவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா உள்பட அனைத்துவகை வைரஸ் தொடர்பாக நடைபெற இருந்த ஆராய்ச்சியாளர்கள் கூட்டம் கொரோனா வைரஸ் காரணமாகவே ரத்து செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply