எல்லை மீறியது கொரோனா! உடனடியாக பிரான்ஸ் ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு

கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில், மறு அறிவித்தல் வரும் வரை நாட்டின் அனைத்து பாடசாலைகளையும் மூடுமாறு அந்நாட்டு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் உத்தரவிட்டுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துவரும் நிலயில், இது தொடர்பான அறிவிப்பினை அவர் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள அவர்,

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை நாட்டின் அனைத்து பாடசாலைகளும் மூடப்படுகின்றன.

நாட்டில் உள்ள குழந்தை பராமரிப்பு மையங்கள், சிறுவர் பாடசாலைகள், கல்லூரிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை என்பன மறு அறிவித்தல் வரை மூடப்படும்.

அதேவேளை, வைத்தியசாலைக்கு அவசர தேவை கருதி செல்லும் நோயாளிகளை தவிர ஏனைய சாதாரண பரிசோதனைகளுக்கு செல்லும் நோயாளிகள் தமது வைத்தியருடனான சந்திப்புக்களை பிற்போடும் படியும் மருத்துவமனைகளுக்கு செல்வதை தவிர்க்கும் படியும் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

முடிந்தவரைக்கும் மக்கள் ஒன்று கூடும் இடங்களை தவிர்த்துக்கொள்ளவும். தேவையேற்படும் பட்சத்தில் நாட்டின் எல்லைகளை மூடுதல் தொடர்பாக ஐரோப்பிய அளவில் ஐரோப்பிய ஒன்றியம் மூலம் தீர்மானம் எடுக்கப்படும் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரை, இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply