நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள மக்களை மீள் குடியமர்த்த சீனா உதவும்

நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள மக்களை மீள் குடியமர்த்த சீன அரசு உதவுமென அறிவிக்கப்பட்டுள்ளது. யுத்தத்தினால் வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கும் சீனா முன்வந்துள்ளது. இதன்படி ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியுதவியாக வழங்கியுள்ளது. குறிப்பாக இடம்பெயர்ந்த நிலையில் நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களை மீளக் குடியமர்த்த இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது. இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகள் குறித்து தமது நாடு தொடர்ந்தும் அவதானித்து வருவதாக சீனா தெரிவித்துள்ளது. அத்துடன் இடம்பெயர்ந்த மக்களை மீள குடியமர்த்தும் பணிக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்கப்படும் எனவும் சீனா தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply