கொரோனா வைரஸ் தற்காலத்தின் உலகளாவிய சுகாதார நெருக்கடி
கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொடர்பில் உலக நாடுகள் முன்னெடுக்கும் நடவடிக்கை தொடர்பில் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சில நாடுகளில் கொரோனா ரைவஸ் (கொவிட் 19) தொடர்பில் அலட்சியமாக செயற்படுதாகவும், இது நெருப்புடன் விளையாடுவதற்கு சமன் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் (கொவிட் 19) பாதிப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நோயாளிகளுக்கு நோயறிதல் பரிசோதனைகளை நடத்துவதை நிறுத்திய நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு தனது கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட நபர்கள் யார் என்று அந்தந்த நாடுகளின் அதிகாரிகளுக்கு தெரியாவிட்டால், அவர்களால் தொற்று நோயைத் தடுக்க முடியாது என உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸை (கொவிட் 19) தற்காலத்தின் உலகளாவிய சுகாதார நெருக்கடியாக மாறியுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு விவரித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply