வன்னிப் பிரதேசத்தில் இன்னும் சில புலி உறுப்பினர்கள் தலைமறைவாக இருப்பதால் மன்னார் நகருக்குள் விசேட ‘பாஸ்’ நடைமுறை.
யுத்தம் முடிவுக்கு வந்த பின்பும் கூட, வன்னிப் பிரதேசத்தில் இன்னும் சில புலி உறுப்பினர்கள் தலைமறைவாக இருப்பதால் மன்னார் நகருக்குள் விசேட ‘பாஸ்’ நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிமாவட்டங்களில் இருந்தும், மன்னார் தீவுப்பகுதிக்கு வெளியில் இருந்தும் மன்னார் நகர் பகுதிக்கு வரும் மக்களுக்கு கடற்படையினர் புதிய பாஸ் ஒன்றினை நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளனர்.
மேற்படி பிரதேசங்களில் இருந்து மன்னார் நகருக்குள் வரும் மக்களின் தேசிய அடையாள அட்டைகள் கோட்டை சோதனை நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கடற்படையினரின் சோதனை நிலையத்தில் கையளித்த பின்னர் பாஸ் ஒன்று வழங்கப்படுகின்றது.
இப்பாஸுடன் மன்னார் நகருக்குள் வந்து தமது அலுவல்களை முடித்துவிட்டு வீடு திரும்பும் போது சோதனைச்சாவடியில் வழங்கப்பட்ட பாஸை அங்கு கையளித்துவிட்டு அடையாள அட்டையை பெற்றுச்செல்ல வேண்டி இருப்பதாகவும், இதனால் தாம் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
வன்னி மக்கள் இயல்பு வாழ்வுக்கு திரும்ப பெரும் தடையாக இருக்கும் தலைமறைவாக உள்ள புலிகள் படையினரிடம் உடனடியாக சரணடைய வேண்டுமென்பதே தமிழ் மக்கள் அனைவரதும் விருப்பமாகும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply