உலகம் முழுவதும் 9 ஆயிரத்தை தாண்டிய கொரோனா உயிரிழப்பு : ரஷியாவில் முதல் பலி
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 160-க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது.
ஆசியா, ஐரோப்பா உள்பட கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளுக்கும் பரவியுள்ள இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 9 ஆயிரத்து 276 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 2 லட்சத்து 25 ஆயிரத்து 236 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சீனாவுடன் எல்லைகளை பகிரும் ரஷியாவில் நேற்றுவரை கொரோனாவுக்கு எந்த உயிரிழப்புகளும் ஏற்படாமல் இருந்தது.
ஆனால், மாஸ்கோ நகரில் உள்ள மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் அனுமதிக்கப்பட்டிருந்த 79 வயது முதியவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதன்மூலம் ரஷியாவில் கொரோனாவுக்கு முதல் நபர் உயிரிழந்துள்ளார். மேலும், அந்நாட்டில் இதுவரை 147 பேருக்கு வைரஸ் பரவியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply