பாராளுமன்றத்தில் கல்வியமைச்சர் சுசில்

அரசாங்கத்தினால் ஆசிரியர் நியமனம் வழங் கப்பட்ட 14 நாட்களுக்குள் தமது கடமையைப் பொறுப்பேற்காதவர்களின் நியமனங்கள் உடனடியாக ரத்துச் செய்யப்படுமென கல்விய அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத் தில் தெரிவித்தார்.அண்மையில் பட்டதாரி ஆசிரியர்களாக நிய மிக்கப்பட்ட 957 பேரில் 200 பேரே கடமைக்குச் சமூகமளித்துள்ளமை தெரியவந்துள் ளது. தமக்கு வசதியான பாடசாலைகளைத் தேடி ஏனையோர் அலைந்து திரிகின்றனர். எனினும் எக்காரணத்திற்காகவும் இவர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட மாட்டாதெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் பத்து இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மொழி மூல மாணவர்களு க்கு கற்பிக்கும் நடவடிக்கைகளில் 49824 தமிழ் மொழி மூல ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட் டுள்ளனரெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இம்முறை க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு ஆங்கில மொழி மூலம் தோற்றிய மாணவர் களுள் 80 சதவீதமானோர் சித்தியடைந்துள்ளதாகவும், க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் இம்முறை 4,000 பேர் தோற் றியதுடன் இவர்களில் 80 வீதமானோர் சித்தி யடைந்துள்ளமை மகிழ்ச்சியளிப்பதாகவும் அமை ச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று ஜே.வி.பி. எம்.பி. ரணவீர பதிரன எழுப்பிய கேள்வியொன்று க்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ் வாறு தெரிவித்தார்.

பாராளுமன்றம் நேற்றுக்காலை 9.30 மணி க்கு சபாநாயகர் டபிள்.யூ.ஜே.எம். லொக்கு பண்டாரவின் தலைமையில் கூடியது.

வாய்மூல விடைக்கான வேளையில் ரணவீர பதிரண எம்.பி. தமில் மொழிமூலம் கற்பிக் கும் ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்பாகக் கேள்வியெழுப்பினார்.

இக்கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர்:-

தமிழ் மொழிமூல ஆசிரியர்கள் 13,213 பேர் சேவையில் உள்ளதுடன் கடந்த ஜூன் மாதம் நியமனம் வழங்கப்பட்ட 959 பட்டதாரி ஆசிரி யர்களிலும் 150 தமிழ் பட்டதாரிகள் உள்ளனர். அத்துடன் 110 ஆங்கில மொழிமூல ஆசிரியர்க ளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இரண்டு வாரங்களுக்குள் ஆராய்ந்து தேவைப்படும் ஆசிரியர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான விளம்பரங்களை பிரசுரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதெனவும் அமைச் சர் தெரிவித்தார்.

அதேவேளை கடந்த ஜூன் முதலாம் திகதி 957 பேர் பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் பெற்றுள்ளனரெனினும் அதில் இருநூறு பேரே கடமைக்குச் சமுகமளித்துள்ளனரென்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply