ஊடகவியலாளர் பிரச்சினைகளுக்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது
ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதா கவும், அதனால் பாராளுமன்றத் தெரிவுக் குழுவொன்றை நியமிக்க வேண் டிய அவசியம் கிடையாதென தகவல் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரிய தர்ஷன யாப்பா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஊடகத்துறையைக் கட்டுப்படுத்துவதற்கு எந்தச் சட்டமும் இல்லையென்று கூறிய அமைச்சர் யாப்பா, சட்டமொன்றை இயற் றுவதற்கும் முயற்சிக்கவில்லை என்று தெரிவித்தார்.
ஊடகவியலாளர்கள் கடத்திக் கொல்லப் படுதல், தாக்கப்படுதல் போன்ற சம்பவங் கள் தொடர்பான விசாரணைகளில் எந்த முன்னேற்றமும் இல்லையாததால் அதனை ஆராய பாராளுமன்றத் தெரிவுக் குழுவை நியமிக்க வேண்டுமென எதிர்க்கட்சியின் பிரதம கொறடா ஜோசப் மைக்கல் பெரேரா யோசனையொன்றை முன்மொழிந்தார்.
இதனை நிராகரித்த அமைச்சர் யாப்பா ஊடகவிய லாளர்கள் மீதான தாக்குதல்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் விசாரணைகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
“போத்தல ஜயந்தவுக்கு அரசுடன் எந்தப் பிரச்சினையும் இல்லை. எதிராக எழுதவும் இல்லை. அதேநேரம் அரசை விமர்சிக்கவோ, சார்பாக எழுதவோ எவருக்கும் உரிமையுண்டு. போத்தல விடயத்தில் ஜனாதிபதியின் அறிவுரை க்கமைய விசாரணை மேற்கொண்டு வருகின்றோம்” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply