யாழ்ப்பாணம் ரயில் நிலையமும் விரைவில் புனரமைக்கப்படும்
யாழ்ப்பாணம் ரயில் நிலையம் புனரமைக்கப்படவுள்ளது. இப்பகுதியில் கண்ணிவெடிகள், மிதி வெடிகள் இருப்பதாக தெரிவிக்கப்படுவதால் அவற்றை முற்றாக அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோல, யாழ்.ரயில் நிலையத்துக்கு அருகில் சேதமான விடுதிகள், அலுவலகங்கள், பெற்றோலியக் கூட்டுத்தாபன தாங்கிகள் என்பனவும் புனரமைக்கப்படவுள்ளன.
இந்த விடுதிகளில் பல வருடங்களாக தங்கியிருப்போரை வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் ரயில் நிலையம் 1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இடம்பெற்ற விமானத்தாக்குதலில் முற்றாகச் சேதமடைந்தது.
யாழ்ப்பாணம் ரயில் நிலையம், அனுராதபுரம் ரயில் நிலையம், நாவலப்பிட்டி ரயில் நிலையம் என்பன ஒரே மாதிரியான அமைப்பில் நிர்மாணிக்கப்பட்டன. இலங்கையில் புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்ட 100 ஆவது ஆண்டை முன்னிட்டு 1964 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் புதிய ரயில் நிலையம் திறந்துவைக்கப்பட்டது. எனினும் அதன் முன்பாக உள்ள பழைய ரயில் நிலையமும் பயன்படுத்தப்பட்டு வந்தது.
இதேநேரம், யாழ்ப்பாணத்திற்கு அப்பால் காங்கேசன்துறைவரையுமான ரயில் பாதையில் சுன்னாகம் ரயில் நிலையமும் திருத்தப்படவுள்ளது.
சுன்னாகத்துக்கு அப்பால் வலிகாமம் வடக்கில் மக்கள் இல்லாததால் முதலில் சுன்னாகம் ரயில் நிலையம் திருத்தப்படவுள்ளது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply