இலங்கையில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் வங்கி கணக்குகளில் உள்ள நிதி அரசுடைமையாக்கப்பட்டுள்ளது
இலங்கையில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் வங்கி கணக்குகளில் உள்ள நிதி அரசுடைமையாக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பெயரில் உள்ள வங்கி கணக்குகளில் இருந்த 71 மில்லியன் ரூபா அரசுடைமையாக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் நிதி புலனாய்வு பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர் புனர்வாழ்வுக் கழகம் இலங்கையில் பதிவு செய்யப்பட்ட ஓர் அரச சார்பற்ற தொண்டு நிறுவனம். மனிதாபிமான பணிகளுக்கான நிதி சேகரிப்பு நடவடிக்கைகளைச் சர்வதேச ரீதியாக மேற்கொண்டு வந்துள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 4 ஆம் திகதி இலங்கை அரசு தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் வங்கி கணக்குகளை முடக்கியதையடுத்துத் தற்போது வங்கி கணக்குகளில் இருந்த நிதி அரசுடைமையாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply