அமெரிக்க போர்க்கப்பலில் கடற்படை மாலுமிகள் 100 பேருக்கு கொரோனா பாதிப்பு
அமெரிக்காவில் கடற்படையின் ‘யுஎஸ்எஸ் கிட்’ போர்க்கப்பலில் ஏறத்தாழ 100 மாலுமிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்றுநோய் தாக்கி இருப்பதாக அங்கு ஊடக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது குறித்து அமெரிக்க பாதுகாப்பு துறை அதிகாரிகள் 2 பேர் சி.என்.என். தொலைக்காட்சி நிறுவனத்திடம் கூறும்போது, “95-க்கும் மேற்பட்ட மாலுமிகளுக்கு (கப்பல் சிப்பந்திகளில் இது 30 சதவீதம்) கொரோனா வைரஸ் தொற்று உள்ளது” என தெரிவித்தனர்.
முன்னதாக கடந்த வியாழக்கிழமையன்று அமெரிக்க கடற்படை வெளியிட்ட ஒரு அறிக்கையில், யுஎஸ்எஸ் கிட் போர்க்கப்பலில் 78 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஏற்கனவே அமெரிக்காவின் யுஎஸ்எஸ் தியோடர் ரூஸ்வெல்ட் விமானம்தாங்கி போர்க்கப்பலில் 1,100-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தாக்கியது நினைவுகூரத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply