சமூக இடைவெளியை பின்பற்றாமல் ஊரடங்கின்போது நடனமாடிய இத்தாலி மேயருக்கு அபராதம்
இத்தாலி நாட்டில் கொரோனா கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. அதன் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கை அந்நாடு கடுமையாக அமல்படுத்தி உள்ளது. பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றி நடக்காதவர்கள், முக கவசம் அணியாமல் நடமாடுபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது.
இந்தநிலையில், இத்தாலி நாட்டில் உள்ள வெண்டிமிக்லியா என்னும் நகரின் மேயர் காய்டனோ ஸ்குலினே, அங்குள்ள ஒரு வீட்டின் மாடியில் ஒருவருடன் சேர்ந்து நெருக்கமாக இருந்தவாறு இசைக்கேற்ப நடனமாடியுள்ளார். அப்போது முக கவசம், கையுறை அணிந்து இருந்தாலும் அவர் சமூக இடைவெளியை பின்பற்றவில்லை.
இதுதொடர்பான வீடியோ காட்சி வலைத்தளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, மேயர் ஸ்குலினேவுக்கு 280 யூரோ(இந்திய மதிப்பில் ரூ.23 ஆயிரம்) அபராதம் விதிக்கப்பட்டது.
தான் செய்தது, முட்டாள்தனமான செயல் என்பதை மேயரும் ஒப்பு கொண்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply