மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்: வீட்டில் இருந்தே பார்த்து பரவசமடைந்த பக்தர்கள்

மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்: வீட்டில் இருந்தே பார்த்து பரவசமடைந்த பக்தர்கள்

மதுரை அரசிக்கு சித்திரை மாதம் நடைபெறும் திருவிழா உலகப்புகழ் பெற்றது. 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவை காண பல்வேறு நாடுகள், வெளிமாநிலங்கள், வெளியூர்களில் இருந்து பக்தர்கள் கூட்டம், கூட்டமாக வருவார்கள். ஊரும் விழாக்கோலம் பூண்டு காணப்படும்.

கொரோனா என்ற கொடிய நோயால் இந்த ஆண்டு விழா சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டது. எனவே சிகர நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் பக்தர்கள் இன்று காலை நடைபெற்றது.

இன்று காலை 9.05 மணி முதல் 9.29 மணிக்குள் சுவாமி சன்னதி முதல் பிரகாரத்தில் உற்சவ மூர்த்தி அமைந்துள்ள சேத்தி மண்டபத்தில் திருக்கல்யாணம் பக்தர்களுக்கு அனுமதி இல்லாமல் நடந்தது. மேலும் அங்கு 4 சிவாச்சாரியார்கள் மட்டும் உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி இந்த திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தார்கள்.

மேலும் கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல தடை உள்ள நிலையில் திருக்கல்யாண நிகழ்ச்சிகளை இந்து சமய அறநிலையத்துறை இணையதளமான www.tnhree.gov.in மற்றும் மீனாட்சி அம்மன் கோவில் இணையதளம் www.maduraimeenakshi.org ஆகியவற்றிலும், கோவில் முகநூல் பக்கத்திலும் மற்றும் திருக்கோவில் யூ டியூப் அலைவரிசையிலும் நேரடியாக ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.

எனவே பக்தர்கள் அனைவரும் கொரோனா தொற்று நோய் பரவாமல் இருக்க வீட்டிலேயே இருந்து இந்த விழாவை கண்டு தரிசிக்க வேண்டும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்திருந்தது.

எனவே காலம், காலமாக நடைபெறும் இந்த திருவிழாவை இந்தாண்டு பெண்கள் நேரில் காண முடியவில்லை. ஆனால் அந்த நிகழ்வை கோவில் நிர்வாகம் நேரடியாக ஒளிபரப்பு செய்தால் வீட்டில் இருந்தே பெண்கள் இறைவனை வேண்டி மங்கலநாண் மாற்றிக் கொண்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply