சுகாதார பாதுகாப்பு துறையினரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக போக்குவரத்து சேவை

அனைத்து பொது போக்குவரத்து சேவைகளும் எதிர்வரும் 11ஆம் திகதி முதல் சுகாதார மற்றும் பாதுகாப்பு துறையினரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக மாத்திரமே வழங்கப்படும் என்று போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர மீண்டும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று முன் தினம் நடைபெற்றது.அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர் நவீன் சொய்சா போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர கலந்துகொண்டனர். இதற்கிடையில், தனியார் பஸ் உரிமையாளர்கள் தமது போக்குவரத்து சேவைகளை முன்னெடுப்பதற்காக ஒரு மாத காலத்திற்கு எரிபொருள் நிவாரணத்தை வழங்குமாறு விடுத்துள்ள கோரிக்கை குறித்து அமைச்சர் மஹிந்த அமரவீர பதிலளிக்கையில். தனியார் பஸ் உரிமையாளர்கள் கோரியது நியாயமானது, ஆனால் அரசாங்கத்தினால் தற்போதைய சூழ்நிலையில் மேலும் நிவாரணம் வழங்குவது சிரமமானதாகும் என்று தெரிவித்தார்.

அத்தியாவசிய சேவைகளுக்காக வரும் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கான அனைத்து அலுவலக ரயில் சேவைகளும் இன்று (04)முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இருப்பினும், இந்த சேவைகள் வழங்கப்படுவது அந்தந்த நிறுவனங்களின் தலைவர்களால் பரிந்துரைக்கப்பட்ட முன்வைக்கபபட்ட பட்டியலுக்கு உட்பட்ட ஊழியர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.

இதற்கான அனுமதியை வாரந்தோறும் பெற வேண்டும். இதற்கான கோரிக்கை ஒவ்வொரு வியாழக்கிழமைக்கு முன்னதாக ரயில்வே திணைக்களத்திற்கு அனுப்ப வேண்டும். ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்பட்டவர்களுக்கு அதுதொடர்பாக குறுந்தகவல் எஸ்எம்எஸ் மூலம் அறிவிக்கப்படும். அதனை ரயிலில் பயணிப்பதற்கு முன்னர் பாதுகாப்புப் பிரிவினரிடம் காட்ட வேண்டும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு ரயில் நிலைய மேடைகளிலும் தலா இரண்டு ராணுவ வீரர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படுவர். இதேவேளை அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் திறக்கப்பட்டவுடன் புதிய திட்டங்களின் கீழ் போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படும் என்று இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தனித்தனியாக பஸ்களை வழங்க முடியும் என்று இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. பஸ்களை பெற்றுக்கொள்வதற்காக ஏற்கனவே பல நிறுவனங்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply