வடக்கில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் தொடர்பில் வெளியான தகவல்
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் நாட்டில் உள்ள சிறப்பு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவரும் யாழ் வாசிகள் 8 பேரும் உடல் நலம் தேறிவருகின்றனர் என யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.மிக விரைவில் அவர்கள் வைரஸ் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதுவரையில் எமது பகுதியில் இருந்து அண்மைக்காலங்களில் 17 பேர் கொரோனா தொற்றுள்ளவர்களாக அடையாளம் காணப்பட்டனர்.அவர்கள் சிகிச்சைக்காக நாட்டில் உள்ள 4 சிறப்பு வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அங்கு சிகிச்சை பெற்றுவந்தவர்களில் இதுவரையில் 9 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து முழுமையாக குணமடைந்த நிலையில் மீண்டும் இங்கு கொண்டுவரப்பட்டு தத்தமது வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் தொடர்ந்து 8 பேரின் உடல் நிலைகளும் தேறிவருகின்றது. அவர்களும் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து முழுமையாக குணமடைந்து விரைவில் தத்தமது வீடுகளுக்கு வருவார்கள் என தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply