ஒரே நாளில் 11231 பேருக்கு கொரோனா பாதிப்பு : ஐந்தாம் இடத்தில் ரஷ்யா

CORONA

சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.ரஷ்யாவில் கொரோனா வைரசை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அந்நாட்டு அதிபர் புதின் எடுத்து வருகிறார்.

தற்போது ஊரடங்கின் ஐந்தாவது வாரத்தில் உள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக எண்ணெய் மதிப்பு சரிந்துள்ள நிலையில் ரஷ்யா கடும் பொருளாதாரா நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளது.

இந்நிலையில், உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் ரஷ்யா 5வது இடத்தை பிடித்துள்ளது.

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,231 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,77,160 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றால் நேற்று 88 பேர் உயிரிழந்த நிலையில், அங்கு மொத்த உயிரிழப்புகள் 1,625 ஆக அதிகரித்துள்ளது.

மற்ற நாடுகளை காட்டிலும் ரஷ்யாவில் கொரோனா உயிரிழப்பு குறைவாக பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply