யாழ். மாநகர சபை, வவுனியா நகர சபை தேர்தல்: ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி `தமிழ்க்` கட்சிகளுடன் தனித்தனிச் சந்திப்பு
யாழ். மாநகர சபை, வவுனியா நகரசபை தேர்தலில் வேட்பாளர்களை நியமிப்பது தொடர்பாக வடக்கிலுள்ள கட்சிகளுடன் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தை வெற்றியளித்துள்ளதாக ஐ.ம.சு.மு. பொதுச் செயலாளரும், அமைச்சருமான சுசில் பிரேம ஜயந்த நேற்றுத் தெரிவித்தார். வெற்றிலைச் சின்னத்தின் கீழ் போட்டியிடுவதற்கு ஏதுவாக விரைவில் வேட்பாளர்கள் தெரிவு செய்யப் படுவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
வடக்கிலுள்ள ‘தமிழ்க்` கட்சிகளுடன் தொடர்ந்து நடத்தப்பட்ட பேச்சுக்களின் போது அரசாங்கம் வெற்றிலைச் சின்னத்தின் கீழேயே போட்டியிடவுள்ளது என்பது பற்றி திட்டவட்டமாக கூறியுள்ளது, எனக் குறிப்பிட்ட அமைச்சர் இதற்கு ஏனைய கட்சிகளும் தமது இணக்கத்தை தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.
யாழ். மாநகர, வவுனியா நகர சபைத் தேர்தலில் பிரதான வேட்பாளராக நியமிக்கப்ப டவுள்ளவர் யார் எனக் கேட்டபோது இதுபற்றி கட்சியின் தலைமை இதுவரை முடிவு செய்ய வில்லை என்றும் குறிப்பிட்டார். ஈ.பி.டி.பி, புளொட், ஈ.ரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எப் (நாபா), ரெலோ (சிறீ) அணி போன்ற கட்சிகளுடனும் பேச்சு நடத்தப்பட்டதாக தெரியவருகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply