சிவநாதன் கிஷோரிடம் விளக்கம் கோருவாராம் ஸ்ரீகாந்தா

இந்த மாத அவசர கால சட்டத்தை நீடிப்பது தொடர்பான வாக்களிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் சமூகமளிக்காமை தொடர்பில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோரிடம் ’கூட்டமைப்பு’ விளக்கம் கோரப்போவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.

வழமை போலவே அவசர கால சட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் அனைவரும் எதிராக வாக்களித்த வேளையில், சிவநாதன் கிஷோர் அந்த வாக்களிப்பில் கலந்து கொண்டிருக்கவில்லை.

இந்த நிலையில், கூட்டமைப்பின் அடுத்த நாடாளுமன்றக் குழுவின் கூட்டத்தின் போது, இது தொடர்பிலான காரணம் பகிர வேண்டும் என சிவநாதன் கிஷோரிடம் கோரியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply