பசுமைப் புரட்சியின் தந்தையின் பாததூளி பட்ட இலங்கை
சர்வதேசம் முழுவதும் மரியாதையும் மதிப்புமுள்ள இந்திய பசுமைப்புரட்சியின் தந்தையான பேராசிரியர் எம்.எஸ். சுவாமிநாதனின் துணையை வடமகாணத்தின் விவசாய அபிவிருத்தியை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ்ச துணைநாடியது மிகமிகப் பொறுப்பு வாய்ந்த செயலாகும். பேராசிரியர் சுவாமிநாதன் 50 வருடங்களுக்கு மேலான விவசாய விஞ்ஞானத்ததின் தத்துவார்த்தத் தேட்டங்களைத் தலையிற் திரட்டியவர் மாத்திரமல்ல அவர் ஒரு நடைமுறை விஞ்ஞானி. தத்துவத்தையும் நடைமுறையையும் ஐக்கியப்படுத்தத் தெரிந்தவர்.
கல்வித்தகைமையால் விஞ்ஞானியாக இருந்த போதும் பொருளாதாரத்திலும் நிர்வாகத்திலும் அபாரா புலமைவாய்ந்தவர். பொருளாதாரத்தை, விஞ்ஞானத்தைப் பிரயோகிப்தால் உயர்த்தவும் விஞ்ஞானத்தைப் பொருளாதார நோக்கிற் கற்க வேண்டும் என்பதையும் தெரிந்தவர். அவர் “சுவாமிநாதன் அறக்கட்டளையின்” ஸ்தாபகரும் விவசாய நிறுவனங்களை லாபத்தில் நடாத்திக் காட்டியவருமாகும். Supremacy of technology is the only economic power.
அவர் பிலிப்பையினில் உள்ள ஐ.நா. ஸ்தாபனத்தின் நெல் ஆராய்ச்சி நிலயத்தின் இயக்குனராகப் பணியாற்றி பல மூன்றாமுலக நாடுகளில் உணவுப்பஞ்சத்தைக் குறைக்க வழி செய்தவராகும்.
அவர் உலகம் முழுவதும் பயணம் செய்து இந்திய சூழலுக்கு உகந்த கோதுமையை இருபது வருடமாகத் தேடிக் கடைசியில் மெக்சிக்கோ உலர்வலயத்திலுள்ள குள்ளக் கோதுமையைக் கண்டுபிடித்து அதைக் கலப்பினமாக்கி இந்தியாவில் சாகுபடிசெய்து காட்டியவர். உயரமாக வளரும் நெல் கோதுமை இனங்களுக்கு அதிக நீரும் அதிக பசளையும் அதிக காலமும் ஆகும் என்பதைக் கண்டு கொண்டு ஆசிய நாடுகளெங்கும் குள்ளமான தானிய வகைகளைச் சிபார்சு செய்து நடைமுறைப்படுத்தி உற்பத்தியை சராசரி ஏக்கருக்கு ஏழுமடங்கால் உயர்த்திக் காட்டியவர்.
கற்றாய்ந்த பேராசிரியர் சுவாமிநாதன் மண்ணின் இயற்பியலையும் வேதியலையும் ஆராய்வதற்கு முன்னர் தனது மாணவர்களை அனுப்பி கிராமப்புறங்களிலுள்ள விவசாயிகளிடமும் பழங்குடிகளிடமும் எவ்வாறு விதை நெல்களையும் கோதுமைகளையும் பாதுகாக்கிறார்கள், ஏன் அந்த இனங்களை அழிய விடாமற் பாதுகாக்கிறார்கள் என்பன போன்றவற்றை அளவாளாவி அவர்களின் அறுவடை வீழ்ச்சி பெருக்கம் போன்ற தரவுகளையும் அவற்றின் பயன்பாட்டுப் பெறுமதிகளையும் சேகரித்ததன் பின் ஆராய்ச்சிகளை நடாத்திக் காட்டியவர். அவரின் Bio diversity ஆராய்ச்சியின் மன்மம் இதுவாகும்.
அவர் தென் இந்தியாவில் கேரளத்தில் ஒரு விவசாயக் கல்லூரியை ஏற்படுத்தும் பொழுது வட இந்தியர்களிடமிருந்து எதிர்ப்புகள் வரக் கூடும் என்பதை ஊகித்து வட இந்தியக் கிராமப் புறங்களிலும் அதே நேரத்தில் 3 விவசாய சர்வகலா சாலைகளை நிறுவியவர்.
அவர் word is god என்ற கொள்கையை உடையவர். அவரது சொல்லை எந்தவித மறுப்புமின்றி பிரதமர் மன்மோகன் சிங் செவி மடுப்பார். மன்மோகன் சிங் மாத்திரமல்ல இந்தியாவில் வந்த எல்லாப் பிரதமரும் அவரது சொல்லைச் செவி மடுத்தார்கள். மற்றும் உலக நாடுகளிலுள்ள அனேக தலைவர்களும் அவரது புத்திமதிகளைக் கரிசனையோடு கேட்டு அவரது சொற்படி நடப்பார்கள்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ்ச அவரைத் தானே தனிப்பட்ட முறையிற் சென்று வரவேற்றுக் கவுரவித்ததோடு தமிழர்களின் தலைவிதியை உங்களிடம் ஒப்படைக்கிறேன் என்று கேட்டுக் கொண்டார். யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களின் விவசாயத்தை அவரது உலக செல்வாக்கு அத்தனையையும் பயன் படுத்தி உயர்த்தி அந்த மக்களை இந்த அவலத்திலிருந்து மீட்டுத்தரும்படி கேட்டுக் கொண்டார். அவரும் பதிலுக்கு வடமாகாணத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்குவதாகவும் மண் விஞ்ஞானம், சிக்கன நீர்ப்பாசனம், நீர்நிர்வாகம், அறுவடைக்கு முந்திய பராமரிப்பு, அறுவடையின் பின்னான சேகரிப்பு மற்றும் சேமிப்பு, சந்தைப்படுத்தல் உத்திகள் போன்றவற்றையும் அறிமுகப்படுத்த உதவுதாகக் கூறியுள்ளார். விவசாயத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தலாம் என்பதை உறுதிப்படுத்தினார். குறிப்பாக விவசாயிகளின் வருவாயை உயர்த்தும் வழிகளே விவசாயிகளுக்கான ஊக்குவிப்பு என்று கூறினார்.
விவசாயிகளைக் கற்பிப்பதும் வவுனியாவில் விவசாய ஆராய்ச்சி நிலயமொன்றை ஏற்படுத்துவதும், ஆராய்ச்சி உபகரணங்கள் அடங்கிய வாகன சகிதம் இடத்துக்கு இடம் நடமாடும், விஞ்ஞான கூடங்களை mobile soil-testing vans நடைமுறைப் படுத்துவதும் தகுந்த விவசாய இயந்திரங்களைப் பயன் படுத்தல் போன்றவற்றை அறிமுகப்படுத்துவதன் மூலம் விவசாயப் பொருளாதாரத்திற்குப் புத்துயிர் அளிக்கும் வழிதுறைகளைக் கூறியுள்ளார். அதே நேரத்தில் கால்நடைப் பண்ணைகள், மீன் வளர்ப்பு, சேதன உரம், விவசாயப் பட்டதாரிகளுக்கான உயர்கல்வி, அவர்களின் சுறுசுறுப்பானதும் பொறுப்புணர்சி உடையதுமான சமூகப்பங்களிப்பு போன்றவற்றை எடுத்துக் காட்டினார். பேராசிரியர் சுவாமிநாதன் பெரிய உலக அங்கீகாரம் படைத்தவர். அவரது சொல்லை நம்பி சர்வதேச நிதி நிறுவனங்களும் அரசாங்கங்களும் தயக்கமின்றிச் செயற்படும். உண்மையிலேயே இந்த இருள் சூழ்ந்த காலத்தில் அவரைக் கண்டு கொண்டது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ்சவின் தலைமைத் தகுதியை எடுத்தியம்புகிறது.
அறிவரசர் எங்கே இருந்தாலும் அவர்களொடு நேசமொன்றாயிருக்கும்.
அவர் மேலும் இந்தியப் பிரதமர் மனமோகன் சிங் அறிமுகப் படுத்திய Regional employment Guaranatee முறையையும் கடைப்பிடித்தால் பெரும் உதவியாக இருக்கும். அதாவது வன்னிப் பிரதேசத்தில் உள்ள மீள் கட்டுமானப் பணிகளுக்கு வன்னிப் பிரதேச மக்களுக்கு வேலை வழங்குவதில் முன்னுரிமை கொடுக்க வேண்டும். அந்ததந்தப் பிரதேச கட்டுமானப் பணிகளில் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப வல்லுனாகளைப் பாவிப்பது தவிர்ந்த மற்றய றோடு போடுதல் குளங்கட்டுதல் கட்டிடநிர்மாணம் போன்ற சரீர வேலைகளை அந்தந்தப் பிரதேச மக்களுக்கு அளிக்கும் முறையையும் கடைப்பிடிக்க வேண்டும். அதன் முதற்கட்டமாக அகதி முகாங்களிலுள்ள இளைஞர்களுக்கு இச் சரீர வேலைகளைக் கொடுப்பதன் மூலம் அவர்களை மனிதர்களாக்க வேண்டும்.
தொழில் சார்ந்த உழைப்பே மானிட சாராம்சமாகும்.
அதனோடு சேர்த்து இந்திரா காந்தி அவர்கள் தனது அபகீர்த்தி வாய்ந்த மிசா சட்ட காலத்தில் ஒரு புதுமையை அறிமுகப்படுத்தினார். அதாவது பிணைப் பொறுப்புகள் இல்லாத விவசாயிகளுக்கும் மற்றைய சிறு தொழில் செய்வோருக்கும் வங்கிகள் பிணையின்றிக் கட்டாயம் கடன் கொடுக்க வேண்டும் என்பதையும் அந்தக் கடனை மீண்டும் பெறும் முறையை வங்கிகள் தாங்களே மேற்கோள்ள வேண்டும் என்ற நடைமுறையையும் செயற்படுத்தினார்.
இதே முறையை இலங்கையிலும் நடைமுறைப் படுத்த இலங்கை அரசுக்கு ஏதோ வழியில் எடுத்தியம்ப வேண்டும். அதனோடு தமிழ் நாடு அரசு இன்று வரை விவசாயிகளுக்கான நீர்ப்பாசனத்துக்கு வேண்டிய மின் சக்தியை இலவசமாக வழங்கி வருகிறது. இலங்கையில் இன்றுவரையுள்ள இலவச நீர் விநியோகத்தோடு இதையும் செயற்படுத்தும் வழிகளை முயற்சித்தால் விவசாயத்தை நம்பி வாழும் 80 வீதமான வடமாகாண மக்கள் ஆறுதல் அடைவர்.
வெறுமனே தமிழ் நாட்டில் உள்ள அரசியற் கோமளிகளிடம் போய் இனவாத உறுமல்களைப் பிரேரிப்பதற்குப் பதிலாக நாம் முன்னேறும் வழிகளைத் தேடி அலைய வேண்டும்.
“இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து
அதனை அவன்கண் விடல்“
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply