‘புளொட்` அமைப்பின் கட்சித் தேர்தல் சின்னமான நங்கூரத்தில் வவுனியா நகர சபை தேர்தலில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி போட்டியிடும்
மூன்று தமிழ்க் கட்சிகளை உள்ளடக்கிய ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி ஒன்றாக இணைந்து போட்டியிடுவதற்கான முயற்சிகளிலேயே தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளது. வவுனியா நகரசபைத் தேர்தலில் `புளொட்` அமைப்பின் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் நங்கூரம் சின்னத்திலேயே போட்டியிடுவோமென தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
அதேநேரம், யாழ்ப்பாணம் மாநகரசபைத் தேர்தலில் எந்தக்கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவது என்பது தொடர்பாக இதுவரை எந்தவொரு இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என்றார்.
இது தொடர்பாக, பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் என். ஸ்ரீதரன் (சுகு) கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது;
கிழக்கில் இடம்பெற்ற உள்ளூராட்சி சபை மற்றும் மாகாணசபைத் தேர்தல்களில் மூன்று தமிழ்க்கட்சிகளை உள்ளடக்கிய ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி தனித்து போட்டியிட்டு தமது ஒற்றுமையை வெளிக்காட்டியுள்ளது.
அவ்வாறானதொரு நிலைமையை உருவாக்குவது தொடர்பாகவே தொடர்ந்தும் பேச்சுகளில் ஈடுபட்டு வருகின்றோம். எனினும், வவுனியா நகரசபைத் தேர்தலில் புளொட் அமைப்பினருடன் இணைந்தே போட்டியிடுவோம்.
அதேநேரம், யாழ்.மாநகரசபைத் தேர்தல் தொடர்பாக எந்தவொரு முடிவும் இதுவரை எடுக்கவில்லையென்றும் அவர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply