கட்டுநாயக்கா விமான நிலையத்தில் தமிழரை விமான நிலைய அதிகாரிகள் துன்புறுத்துவதாக லண்டனில் இருந்து பொய்ப் பிரச்சாரங்கள்
பிரபாகரனைத் தலைமையாகக் கொண்டிருந்த புலிகள் அமைப்பினர் முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டு தாயகத்தில் (இலங்கையில்) அமைதியான சூழ்நிலை இன்று உருவாகியுள்ளது. இந்நிலையில் புலம்பெயர் நாடுகளில் வாழும் எராளமான தமிழ் மக்கள் புலிகளின் பிடியிலிருந்து தப்பிவந்து அகதி முகாம்களில் தஞ்சமடைந்துள்ள தமது உறவினர்களை சந்திப்பதற்காகவும், ஏனைய தேவைகள் கருதியும் இலங்கைக்கு செல்வதற்கான ஆயத்தங்களை மேற்கொள்கின்றனர்.
மேற்கூறிய தேவைகளுக்காக அங்கு செல்வதற்கு தயாராகும் தமிழ் மக்களை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னாள் புலி ஆதரவாளர்கள் சிலர் மேற்கொள்கின்றனர். அதன் பிரச்சாரமாக இலங்கைக்கு செல்லும் தமிழர்களை இலங்கையின் சர்வதேச விமான நிலையமான கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து விமானநிலைய அதிகாரிகள் துன்புறுத்துவதாகவும், பலதரப்பட்ட விசாரணைகளை மேற்கொண்டு தடுத்து வைப்பதாகவும் லண்டனில் வசிக்கும் சிலர் தமது இணையத் தளங்களின்மூலம் திட்டமிட்ட பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொள்கின்றனர்.
புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் அங்கு செல்வதால் இலங்கை அரசாங்கத்திற்கு ஒரு குறிப்பிட்ட அளவிலான வருவாய் கிடைப்பதுடன், இலங்கையில் அமைதிநிலை ஏற்பட்டுள்ளமை தொடர்பானதகவல்கள் சர்வதேசரீதியாக வெளியாகிவிடும். இந்நிலையில் அதனை தடைசெய்வதன் நோக்கமாகவே இதுபோன்ற பொய்யான பிரச்சாரங்கள் அவர்களால் முன்னெடுக்கப்படுகின்றது. இலங்கையில் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகள் உச்சநிலையில் இருந்தபோது, அங்கு விஜயம்செய்த மக்கள்பற்றி மெளனம்சாதித்த மேற்படி முன்னாள் புலி ஆதரவாளர்கள் இன்று தமிழ்மக்களின் நலன்கருதி முதலைக்கண்ணீர் வடிப்பது அவர்களின் சந்தர்ப்பவாத அரசியல் நாடகத்தினை வெளிக்காட்டுவதாகவே நாம் கருதுகின்றோம்.
எனவே மேற்படி பசுத்தோல் போர்த்திய புலிகளின் பொய்யான பிரச்சாரங்களை கவனத்தில் கொள்ளாது உங்களின் பயணத்தினை அச்சமின்றி தொடருமாறு நாம் அறிவுரை கூறவிரும்புகின்றோம்.
ஆசிரியர் மஹாவலி.கொம்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply