கருணா விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து விலகும் நிலையை ஏற்படுத்தியது ஐக்கியதேசிய கட்சியே : அசு மானசிங்க
கருணா விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து விலகும் நிலையை ஐக்கியதேசிய கட்சியே ஏற்படுத்தியது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அசு மானசிங்க தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கருணா வெளியேறுவதற்கான சூழ்நிலையை ஐக்கியதேசிய கட்சியே ஏற்படுத்தியது என தெரிவித்துள்ள மானசிங்க ஆனால் நாங்கள் அவரை நாடாளுமன்றத்திற்கு நியமிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கியதேசிய கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடுவதற்கு கருணாவிற்கு நாங்கள் இடமளிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். நாங்கள் அரசியல் நோக்கத்துடன் அவரை பிரித்தோம்,ஆனால் அதன் பின்னர் அவருடன் தொடர்புவைத்துக்கொள்ளவில்லை என மானசிங்க தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply