ஈழவேந்தனைப் போல் சிவாஜிலிங்கமும் கைவிடப்படுகிறார்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்தின் பாராளுமன்ற விடுப்புக்காலம் முடிவடையும் நிலையில், மேலும் விடுமுறை நீடிப்புக் கோரி பிரேரணை சமர்ப்பிக்க வேண்டி நேரிட்டுள்ளது. ஆனால், வைத்திய சான்றுகளை விடுமுறைக்கான காரணமாக தொடர்ச்சியாக ஒவ்வொரு உறுப்பினருக்கும் சமர்ப்பித்துக் கொண்டிருப்பது சாத்தியமற்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் சுட்டிக்காட்டின. இந்நிகழ்வுகள், ஈழவேந்தனைப் போல் சிவாஜிலிங்கத்தையும் கைவிட கூட்டமைப்பு தயாராகி வருவதற்கான அறிகுறிகளென சொல்லப்படுகிறது.

வெளிநாடுகளில் இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சார்பாக விடுமுறை நீடிப்பு பிரேரணைகள் சமர்ப்பிக்கப்பட்ட இரு சந்தர்ப்பங்களில், அதற்கான காரணங்கள் குறித்து கேள்வி எழுப்பியிருந்த அரச தரப்பு, இறுதியாக கடந்த பாராளுமன்ற அமர்வின் போது கூட்டமைப்பின் 4 உறுப்பினர்கள் சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட விடுமுறை நீடிப்பு பிரேரணைகளுக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தது.

சபையில் பிரேரணைகள் மூலம் விடுமுறைகளை பெற்றுக் கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள், இராஜதந்திர சிறப்புரிமையுடன் கூடிய இலங்கை கடவுச்சீட்டை பயன்படுத்தி வெளிநாடுகளுக்குச் சென்று அங்கு நாட்டுக்கும், அரசியலமைப்புக்கும் எதிராக பேசி வருகின்றனர் என்பதே ஆளுந்தரப்பின் குற்றச்சாட்டாக இருந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்தின் பாராளுமன்ற விடுப்புக்காலம் முடிவடையும் நிலையில், மேலும் விடுமுறை நீடிப்புக் கோரி பிரேரணை சமர்ப்பிக்க வேண்டி நேரிட்டுள்ளதால், இத்தகைய தொரு நிலைமையில் விடுமுறைக்கான சான்றுகளை சமர்ப்பிப்பது என்பது சிரமமாக இருக்குமென கட்சிக்குள் அபிப்பிராயங்கள் ஏற்பட்டிருப்பதாக `கூட்டமைப்பு` வட்டாரங்களிலிருந்து தெரிய வருகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply