அமெரிக்கா, பிரேசிலை துரத்தும் கொரோனா : ஒரே நாளில் 45 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு

அமெரிக்கா, பிரேசிலை துரத்தும் கொரோனா - ஒரே நாளில் 45 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து இரண்டாம் இடத்தில் உள்ள பிரேசில் நாட்டில் கொரோனாவின் தாக்கம் வேகமாக அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், அமெரிக்கா மற்றும் பிரேசில் நாட்டில் ஒரே நாளில் கொரோனா வைரசால் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அமெரிக்காவில் 47ஆயிரத்துக்கும் மேலானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 25.5 லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும், ஒரே நாளில் 663 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

இதேபோல், பிரேசில் நாட்டில் 46,907 பேர் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்துள்ளனர். ஒரே நாளில் 1,055 பேர் பலியாகினர். இதனால் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 56 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply