ரொரன்ரோவில் காணாமல் போன தமிழ்ப் பெண்
கனடாவில் வாழ்ந்து வந்த இலங்கை தமிழ் பெண் ஒருவரை காணவில்லை என ரொரன்ரோ பொலிசார் தமது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளனர். 47 வயதுடைய சசிகுமாரி அமரசிங்கம் எனும் பெண்ணே காணாமல் போயுள்ளார்.கடந்த 25ஆம் திகதி இரவு 10.30 மணிக்கு பாராளுமன்ற வீதிப்பகுதியில் இறுதியாக காணப்பட்ட இவர் மாயமாகியுள்ளார்.
குறித்த நபர் 4 அடி 5 அங்குலம் உயரம் கொண்டவர் எனவும் காணாமற்போன அன்று நீல நிற சட்டையும், ரோஸ் நிற நீளக்காற்சட்டையும் அணிந்திருந்தார்.இவர் தொடர்பில் யாருக்கேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக தங்களுக்கு தெரியப்படுத்துமாறு பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply