அஞ்சல் மூலம் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு ஒரு முக்கிய அறிவுறுத்தல்
அஞ்சல் மூல வாக்களிப்பின் போது வாக்காளர்கள் உறுதி செய்யப்பட்ட அடையாள அட்டைகளை சமர்ப்பிப்பது அவசியம் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அத்துடன் வாக்களிப்பின்போது அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம், அலுவலக அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு என்பவற்றில் ஒன்றை வாக்காளர் சமர்ப்பிக்க வேண்டும்.
இதனை சமர்ப்பிக்காதவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் வாக்களிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இதேவேளை வாக்களிக்க செல்பவர்கள், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.
கைககளுக்கு கிருமி தொற்றுக்களை பயன்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன் வாக்களிப்பதற்காக நீல நிற அல்லது கறுப்பு நிற பேனையை எடுத்துவர வேண்டும் என்றும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply