வன்னி மக்களுக்கு புளத்சிங்கள பிரதேச சபைத் தலைவர் உணவுப் பொருட்களைக் கையளித்தார்

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவுவதற்காக புளத்சிங்கள பிரதேச சபைத் தலைவர் தேசபந்து துசித்த குலரத்ன தலைமை யிலான குழுவினர ஒரு தொகை உணவுப் பொருட்களைக் கையளித்தனர். புளத்சிங்கள பிரதேச சபை பிரிவு மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட மேற்படி நிவாரணப் பொருட்களை மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சில் கையளிக்கும் நிகழ்வு அண்மையில் கொழும்பில் நடைபெற்றது. நிவாரணப் பொருட்களை புளத்சிங்கள பிரதேச சபைத் தலைவர் தேசபந்து துசித்த குலரத்ன, மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிஸாட் பதியுதீனிடம் கையளித்தார். சுமார் 15 லட்சம் ரூபா பெறுமதியான இப்பொருட்களில் அரிசி, தேங்காய், பால்மா, சவர்க்காரம், புதிய உடைகள், குடிநீர், மருந்துப் பொருட்கள் உட்படப் பல அத்தியாவசியப் பொருட்கள் அடங்கியிருந்தன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply