வெளிநாட்டு பயணிகளுக்கு தனிமைப்படுத்துதல் இல்லை: இங்கிலாந்து அதிரடி முடிவு
50-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் இருந்து இங்கிலாந்து வருவோருக்கு 2 வார கட்டாய தனிமைப்படுத்தல் விதிமுறை கடந்த மாதம் 8-ந்தேதி முதல் அமலில் இருந்து வந்தது.
வரும் 10-ந் தேதி முதல் இந்த கட்டாய தனிமைப்படுத்தல் கிடையாது என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அந்த நாட்டின் போக்குவரத்து மந்திரி கிராண்ட் ஷாப்ஸ் நேற்று வெளியிட்டார். முன்னணி சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த நாடுகளின் பட்டியலில் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்டவை இடம் பெறுகின்றன. இங்கிலாந்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2.85 லட்சமாகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 44 ஆயிரமாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இன்று (சனிக்கிழமை) முதல் அங்கு ஓட்டல்கள், உணவு விடுதிகள் தற்காலிகமாக திறக்கப்படுகின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply