முகமாலையில் புலிகளின் நிலைகளை இராணுவத்தினர் கைப்பற்றிவிட்டனராம்: பாதுகாப்பு அமைச்சு

யாழ்ப்பாணம் முகமாலை முன்னரங்கப் பகுதியில் விடுதலைப் புலிகளின் நிலைகளை இராணுவத்தினர் கைப்பற்றியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. 
 
இன்று வியாழக்கிழமை காலை முகமாலை மற்றும் கிளாலி முன்னரங்கப் பகுதியை இராணுவத்தினர் தமது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்ததாகவும், இதில் விடுதலைப் புலிகள் பலர் கொல்லப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பூநகரி இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டதன் பின்னர் இராணுவத்தினர் முகமாலை முன்னரங்கப் பகுதியிலிருந்து ஆனையிறவை நோக்கிய முன்னேற்ற நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தனர்.

எனினும், இராணுவத்தினரின் முன்னேற்ற நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையில் விடுதலைப் புலிகள் கடுமையான எதிர்த்தாக்குதல்களை நடத்தியிருந்ததாகவும், இதில் இராணுவத்தினருக்குப் பெருமளவு சேதங்கள் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

கடந்த மூன்று நாட்களாக வன்னியில் இடம்பெற்ற மோதல்களில் 200 இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன், 300ற்கும் அதிகமானவர்கள் காயமடைந்ததாக ‘டிஃபன்ஸ் வொட்ச்’ இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply