கிழக்கில் 9 பாடசாலைகள் அபிவிருத்தியடையும்
கிழக்கு மாகாணத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியில் “இசுறு பாடசாலை’ திட்டத்தின் கீழ் 9 பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. கிழக்கு மாகாணத்திலுள்ள ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவிலும் தலா ஒரு பாடசாலை தெரிவு செய்யப்பட்டு அவை முழு அளவிலான உட்கட்டமைப்பு வசதி கொண்ட பாடசாலையாக புனர்நிர்மாணம் செய்யப்படவுள்ளன.
இதன் முதல் கட்டமாக அம்பாறை மாவட்டத்தில் மெதகம மகா வித்தியாலயமும் , தம்புலுவில் மத்திய மகா வித்தியாலயமும், மட்டக்களப்பு மாவட்டத்தில் கதிரவெளி விக்னேஸ்வரா வித்தியாலயம் , கொக்கட்டிச் சோலை முதலைக்குடா வித்தியாலயம் , பேத்தாளை விபுலானந்த வித்தியாலயமும் , திருகோணமலை மாவட்டத்தில் சிராஜ் முஸ்லிம் வித்தியாலயம், அல்நூரியா வித்தியாலயம் , பதவி பளுகஹ பங்குவ மகா வித்தியாலயம் , கந்தளை அக்கோபுர மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
தெரிவு செய்யப்பட்டுள்ள பாடசாலைகளில் மாணவர்களுக்கு தேவையான வகுப்பறைகள் , மலசல கூடம், ஆசிரியர் ஓய்வு அறை, விளையாட்டு மற்றும் சுகாதார மேம்பாட்டுக்கான வசதிகள் செய்து கொடுக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் உபுல் வீரவர்தன தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply