தாஜ்மஹால் திறப்பு இல்லை: ஆக்ராவில் கொரோனா தொற்று அதிகரிப்பதால் நடவடிக்கை
இந்திய அரசு கடந்த 1-ந்தேதியில் இருந்து ஊரடங்குடன் கூடிய அன்லாக்-2-ஐ அறிவித்தது. அப்போது நாட்டில் உள்ள நினைவுச் சின்னங்கள் மற்றும் புராதான இடங்கள் வருகிற ஜூலை 6-ந்தேதி (இன்று) முதல் திறக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.
அதன்படி ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் இன்று முதல் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படும். பொதுமக்கள் மாஸ்க் அணிந்து வர வேண்டும். தாஜ்மஹால் உள்ள தூண்கள் உள்பட எதையும் தொடக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது ஆக்ராவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் தாஜ்மஹால் திறக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆக்ராவில் உள்ள புராதான இடங்களும் திறக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தளர்வு அறிவிப்புக்குப்பின் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply