சாத்தான்குளம் வழக்கு : களத்தில் இறங்கும் சிபிஐ
நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐ இன்று தொடங்குகிறது. டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் 7 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழுவினர் இன்று மதுரை வருகின்றனர். இதற்கிடையே ஏடிஎஸ்பி விஜய்குமார் சுக்லா தலைமையிலான குழு மதுரை சிபிஐ அலுவலகத்தில் ஆலோசனை நடத்தியது.
சாத்தான்குளம் கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் வழங்க உள்ளார். அதன்பின்னர் வழக்கு தொடர்பான கோப்புகளை பெற்றதும், முதலில் இருந்து விசாரணையை தொடங்க உள்ளது.
பெண் காவலர் ரேவதி முதல் அனைவரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர். சாத்தான்குளம் சென்று சம்பவம் தொடர்பான அனைத்து இடங்களிலும் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு நடத்த உள்ளனர்.
இதற்கிடையே தந்தை, மகன் மரணம் தொடர்பான வழக்கு ஆவணங்கள் அனைத்தும் தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து மதுரை முதன்மை குற்றவியல் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக இவ்வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த சிபிசிஐடி, இதுவரை 10 போலீசாரை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply