சைக்கிளில் 3 ஆயிரம் கி.மீ. பயணித்த மாணவர்
கொரோனா அச்சுறுத்தலால், உலகெங்கும் போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால் பலரும் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஸ்காட்லாந்தின் அபர்தீன் பகுதியில் படித்துவந்த கிளியான் என்ற கல்லூரி மாணவர், சைக்கிளில் 3 ஆயிரத்து 218 கி.மீ. தூரம் பயணித்து சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார்.
அவரது வீடு, கிரீஸ் தலைநகர் ஏதென்சில் உள்ளது. நாடு கடந்து தனது சொந்த ஊருக்கு சைக்கிளிலேயே செல்ல கிளியான் முடிவெடுத்தார்.
ஆங்காங்கே தங்கிக்கொள்வதற்கு தற்காலிக கூடாரம், பிரெட் பாக்கெட்டுகள், வெண்ணெய் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தனது பயணத்தைத் தொடங்கினார் கிளியான்.
இயல்பாகவே சாகசப் பயணங்களில் ஆர்வமுள்ள கிளியான், 7 வார கால பயணத்துக்குப் பிறகு தன்னுடைய வீட்டை அடைந்திருக்கிறார்.
சாலையில் பல இடர்பாடுகள் இருந்ததாகவும், டயர் அடிக்கடி பஞ்சர் ஆனதாகவும், இது ஒரு தனித்துவமான பயணம் என்றும் கிளியான் கூறினார்.
சூழ்நிலை சரியான பிறகு மீண்டும் விமானத்தில் பறந்து கல்லூரிக்குத் திரும்பவிருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply