டொனால்டு டிரம்ப் வெள்ளைமாளிகையில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார் : சபாநாயகர் நான்சி
பாக்ஸ் நியூஸ் பேட்டியின் போது அமெரிக்க தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்வேன் என்று உறுதியாகக் கூற மறுத்துவிட்டார். இதை தொடர்ந்து அமெரிக்க தலைவர்கள் டொனால்டு டிரம்பிற்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி கூறியதாவது:-
தேர்தலில் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தோற்றால் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறுவது குறித்து சிறிதும் அக்கறை காட்டவில்லை.அவர் வெளியேற மறுத்தால் அவர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்.
“உண்மை என்னவென்றால், அவர் இன்னும் அறிந்திருந்தாலும் இல்லாவிட்டாலும், அவர் வெளிறுவார்.
“அவர் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற விரும்பாததால், அமெரிக்காவின் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி பதவியேற்பதற்கான தொடக்க விழா இருக்காது என்று அர்த்தமல்ல என கூறினார்
டிரம்பின் கருத்துக்களுக்கு பதிலளிக்கும் விதமாக ஜோ பிடன் பிரச்சாரத்தின் போது ‘இந்தத் தேர்தலை அமெரிக்க மக்கள் முடிவு செய்வார்கள். வெள்ளை மாளிகையில் இருந்து மீறுபவர்களை வெளியேற்றுவதற்கு அடுத்த அமெரிக்க அரசு முற்றிலும் திறமையானது என கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply