மக்களுக்காகவே நாம் மண்ணை நேசிக்கின்றோம்; மக்களில்லாத மண்ணை நாம் நேசிக்கவில்லை : தோழர் பத்மநாபா

19ம் ஆண்டு நினைவஞ்சலி
தோழர் பத்மநாபா
19.11.1951 – 19.06.1990

அவனியில் அவதரித்த
அவதாரம் எங்கள் நாபா
அகிலம் போற்றிடும்
அத்தியாயம் எங்கள் நாபா

சூரியன் போல் அல்ல
சந்திரனின் சாயல் எங்கள் நாபா
சாந்த முகம் கொண்டு
சரித்திரம் படைத்தவர் எங்கள் நாபா

திறன் அறம்தெரிந்து
தித்திக்கும்மொழி பேசுபவர் எங்கள் நாபா
திகட்டும் இன்பம் பொங்கும்
திறமை அரசியல் தருபவர் எங்கள் நாபா

காங்கேயன் மண்ணில்
கலங்கரை விளக்கானவர் எங்கள் நாபா
காவியத்தில் வீரனாகி
கவிதைக்குள் கரு பெற்றவர் எங்கள் நாபா

கையேந்திநின்ற காளைகளுக்கு
கையளவு அரசியல் தந்தவர் எங்கள் நாபா
கைகோர்த்த நின்ற நண்பனின் சதியால்
கைத்துப்பாகியால் சுடப்பட்டவர்எங்கள் நாபா

இந்தியா இன்றி எங்களுக்கு
இறுதித்தீர்வு இல்லை என்றார் எங்கள் நாபா
இறைவன்போல் எடுத்துரைத்த வார்த்தைகளை
இறைமொழி தந்தவர் எங்கள் நாபா

தெளிந்த நீரோடை போல
தெளிவானவர் எங்கள் நாபா
தேன்போன்ற இனிமைத் தமிழ் தருவதில்
தென்னவன் எங்கள் நாபா

வன்முறை வார்த்தைகளை
வன்முறையில்லாமல் கண்டிப்பவர் எங்கள் நாபா
வார்த்தையில் வர்ணமில்லாமல்
வருடிக் கொடுப்பதில் வல்லவர் எங்கள் நாபா

உன்னத மனிதர்களில் ஒப்பான
உத்தமர் எங்கள் நாபா
உண்மைதனை உரக்ககூறி
உலகறியசெய்தவர் எங்கள் நாபா

வண்ணம்மின்னும் வர்ணங்களில்
வார்த்தெடுத்த ஒர்வர்ணம் எங்கள் நாபா
வானத்தில் மிளிரும் நட்சத்திரங்களில்
வால்வெள்ளி நட்சத்திரம் எங்கள் நாபா

உதிரம் இல்லாத கரம் தனை
உண்மையில் நேசித்தவர் எங்கள் நாபா
உள்ளத்தில் வன்மை இல்லாத
உவமானம் உவமேயம் கொண்டவர் எங்கள் நாபா

வேதனைகளை பல தாங்கி
சோதனைக்களம் கண்டவர் எங்கள் நாபா
போதனைகள் கருத்தோங்க
சாதனைகள் படைத்தவர் எங்கள் நாபா

மலையக மக்களையும் என்றும்
மடியில் இட்டு தாலாட்டியவர் எங்கள் நாபா
மண்ணில் இவரைப்போல் உண்டோ
மறையாது அழியாது உங்கள் நாபா நாமம்

உலகைவிட்டு மறைந்தாலும்
உலகாழுமை எமக்கு வேண்டாம்
உண்மை தனைவேண்டி நிற்ப்போம்
உறக்கம் கலைத்து எழுந்தோடி வாருங்கள் நாபா

மானிடர்களில் நீங்கள் என்றும்
மகாத்மா காந்தி எங்கள் நாபா
மறுபிறவியில் என்றோ ஒரு நாள் உங்கள்
மடியிலிருந்து அரசியல் பயில்வோம் நாபா

நெஞ்சத்தில் உங்களை நினைத்து
நெஞ்சார தொழுகின்றோம் நாபா
நெடுந்தூரபயணம் செல்வோம்
நீங்களும் வாருங்கள் நாபா.. நாபா…

உன்னதமான மனிதனாக
உங்களால் நடமாடுகிறோம் நாபா
உரத்து சொல்கிறோம்
உங்கள் சிசியன் என்று

பகைவன் அப்போ இல்லை
பயணம் தொடர்ந்து செல்வோம் நாபா
பாதையியே முட்களும் புதர்களும் இல்லை
பண்பாளனே எழுந்து வாருங்கள் நாபா

எங்கள் அரசியல் ஆசானுக்கு வீரவணக்கம்
ஈ.பி.ஆ.எல்.எவ் (சுவிஸ்)
sun_thar@hotmail.com

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply