யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு புதிய கட்டிடம்

யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான தேர்தலை நடத்துவதற்குரிய வேலைகள் நடைபெற்றுவரும் நிலையில் மாநகர சபைக்குத் தெரிவு செய்யப்படும் மேயர் மற்றும் உறுப்பினர்களுக்கான புதிய அலுவலகக் கட்டிடம் அமைக்கும் வேலைகளும் துரித கதியில் நடைபெறுகின்றன. நல்லூரில் யாழ். மாநகர சபை அலுவலகம் அமைந்திருக்கின்ற வளாகத்திலேயே இந்தக் புதிய கட்டிடம் அமைக்கப்பட்டு வருகின்றது.

80 அடி நீளமும் 25 அடி அகலமும் கொண்ட இந்தக் கட்டிடம் அமைப்பதற்கு சுமார் இரண்டு மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாநகர சபை ஆணையாளர் மு.செ.சரவணபவன் தெரிவித்தார்.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பெரும்பாலும் தேர்தலுக்கு முன்னதாக இக் கட்டிட வேலைகளை நிறைவு செய்ய உத்தேசித்துள்ளதாகவும் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply