பிரபாகரன் செத்துப் போனதை ஒப்புக்கொண்டார் அறிவுழகன்

பிரபாகரன் செத்துப்போன பின்பு அவரின் சாவு தொடர்பான உறுதிப்படுத்தப்படாத ஒரு செய்தியை, பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரரென, மே, 22ம் திகதி வெளியிட்டமைக்காக வருத்தப்படுகின்ற அதே வேளையில் அவ்வாறான ஒரு செய்தியை வெளியிட்டு குழப்பகரமான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியதற்காக எமது அன்புக்குரிய மக்களிடம் புலிகளின் புலனாய்வுத்துறை மன்னிப்புக் கோருகின்றது என புலிகளின் புலனாய்வுத்துறையின் வெளியகப் பணிப் பிரிவு பொறுப்பாளர்ரென தன்னைக்கூறிக் கொள்ளும் கதிர்காமத்தம்பி அறிவழகன் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிடுள்ளார்.

பிரபாகரனை கொன்றுவிட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்த போது இதை புலிகளின் சர்வதேச விவகார பொறுப்பாளர் செல்வராசா பத்மநாபன் முதலில் மறுத்தார். மறுநாள் கொல்லப்பட்ட பிரபாகரன் உடலை இலங்கை ராணுவம் காட்டியது. இதற்கு பின்பும் பத்மநாபன் மறுப்பு தெரிவித்தார். வேறு ஒருவர் உடலை காட்டி பிரபாகரன் என்று கூறுவதாக புலிகள் தரப்பில் செய்திகளும் ஆய்வுகளும் பல வெளிவந்தன.

சில வாரங்களின் பின்பு, செல்வராசா பத்மநாபன் பேட்டி ஒன்றில் பிரபாகரன் இறந்து விட்டதை ஒத்துக்கொண்டார். ஆனால் இதற்கு புலிகளின் இணைய தளமான தமிழ்நெட்டில் மறுப்பு தெரிவித்து இருந்தது. புலிகளுக்கு சர்வதேச விவகார பொறுப்பாளர் பத்மநாபன் 17-ந் தேதி நடந்த போரில் பிரபாகரன் மரணம் அடைந்து விட்டதாக கூறி இருக்கிறார். இது தொடர்பாக புலிகள் உளவுத்துறை தமிழ் நெட்டிடம் கூறியுள்ள தகவலில் புலிகள் தலைமையிடம் இருந்து உரிய ஆதார தகவல் வரும்வரை எதுவும் கூற முடியாது.

புலனாய்வுத்துறையின் சர்வதேச பொறுப்பாளர் அறிவழகன் கொடுத்துள்ள தகவல்படி பிரபாகரன் பாதுகாப்பாக இருக்கிறார். உரிய நேரம் வரும்போது அவர் வெளியே வருவார். பிரபாகரன் இறந்ததற்கான உறுதியான ஆதாரங்களை இதுவரை இலங்கை அரசு வெளியிடவில்லை என தமிழ்நெட் மேலும் தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கதிர்காமத்தம்பி அறிவழகன் இன்று (ஜூன் 18) வெளியிட்ட அறிக்கையில், எமது தேசியத் தலைவரின் வீரச்சாவு தொடர்பாக பல்வேறு தரப்பினர் பல்வேறு தகவல்களை வெளியிட்டு வந்தனர். அவர் கைது செய்யப்பட்டதாகவும் சரண் அடைந்ததாகவும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின் கொல்லப்பட்டதாகவும் அவர் தற்கொலை செய்துகொண்டார் எனவும் பல்வேறு மாறுபட்ட செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் – எந்த செய்தியினையும் தகவலையும் முழுமையாக உறுதிப்படுத்தி வெளியிட வேண்டிய கடமை புலனாய்வுத்துறையினர் ஆகிய எமக்கு உண்டு. அதனடிப்படையில் – தேசியத் தலைவர் அவர்கள் சரணடையவோ அல்லது கைது செய்யப்படவோ இல்லை என்பதையும் அவர் சிறிலங்கா படையினருடன் போரிட்டே வீரகாவியம் ஆகினார் என்பதையும் நாம் மிகத் திடமாக உறுதிப்படுத்துகின்றோம்.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களது அந்த மாபெரும் தியாகம் தொடர்பான உறுதிப்படுத்தப்படாத ஒரு செய்தியை 22 ஆம் திகதி வெளியிட்டமைக்காக வருத்தப்படுகின்ற அதே வேளையில் அவ்வாறான ஒரு செய்தியை வெளியிட்டு குழப்பகரமான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியதற்காக எமது அன்புக்குரிய மக்களிடம் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை மன்னிப்புக் கோருகின்றது எனத் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : TELOnews


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply