துருக்கியில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.26 லட்சத்தை கடந்தது

துருக்கியில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.26 லட்சத்தை கடந்தது

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. உலக அளவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிப்பு அடைந்துள்ள நாடுகளின் பட்டியலில் துருக்கி 16-வது இடம் பிடித்துள்ளது.

இந்நிலையில், துருக்கியில் ஒரே நாளில் 927 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர். மேலும் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து, துருக்கியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 26 ஆயிரத்து 100 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5,613 ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply