வன்னிக்கான பாதுகாப்பான பாதை ஒன்றை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் கோருகிறது

அரசாங்க கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து  விடுதலைப்புலிகளின் வசம் உள்ள வன்னிக்கான பாதுகாப்பான பாதை ஒன்றை திறப்பதற்கான அவசியத்தை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக விடுதலைப்புலிகளுடனும் அரசாங்கத்துடனும் பேச்சுவார்த்தையை நடத்தி வருவதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் அறிவித்துள்ளது.

பயணிகளின் போக்குவரத்து அம்புல்ன்ஸ் வண்டிகளுக்கான போக்குவரத்து உணவு நிவாரணப்பொருட்களை எடுத்துச்செல்ல மற்றும் யுத்தத்தில் இறந்தவர்களை பரிமாற்றிக்கொள்ள இந்த பாதுகாப்பான பாதை அவசியமானது என சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் கொழுமுபுக்கான தலைவர் போல் கெஸ்டெலா தெரிவித்துள்ளார்.

பாரிய கஸ்டநிலைக்கு மத்தியிலும் இன்று 24 நோயாளிகளை வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்து வருவதற்கும் யுத்தத்தில் கொல்லப்பட்ட 18 பேரின் சடலங்களை கொண்டு: வருவதற்கும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் நடவடிக்கையை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply