பத்மநாபாவின் பத்தொன்பதாவது ஆண்டு நினைவு தினம்

தமிழ் பேசும் மக்களின் விடிவிற்கான போராட்டத்தில் தமது உயிரை அர்ப்பணித்த எமது தோழர்கள், சக இயக்கப் போராளிகள், பொதுமக்களை நினைவு கூரும் வகையில் நேற்று (19.06.2009) தியாகிகள் தினம் அனுஸ்டிக்கப்பட்டது. பத்மநாபா ஈபிஆர்எல்எவ் கட்சியின் யாழ் பிராந்திய தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் தி..சிறிதரன், புளொட் அமைப்பின் யாழ் மாவட்ட பொறுப்பாளர் கஜன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி ஆரம்பித்து வைத்தனர்.

கட்சி கொடி ஏற்றப்பட்ட பின்னர் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் போராட்டத்தில் உயிர் நீத்தவர்களின் உருவப்படத்திற்கு கட்சி உறுப்பினர்கள் மலர் மாலை அணிவித்தனர். உயிர் நீத்த தோழர்களின் பெற்றோர், உற்றார், உறவினர்கள் கட்சியின் நலன் விரும்பிகள் தியாகிகளின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதனை தொடர்ந்து தோழா கங்கா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பத்மநாபா ஈபிஆர்எல்எவ் கட்சியின் யாழ் பிராந்திய செயலாளர் தோழர் மோகன், கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சிறிதரன் ஆகியோர் உரையாற்றினர்.

இந் நிகழ்வில் கலந்து கொண்ட இறந்த தோழர்களின் பெற்றோர்களுக்கு கமுகு, மற்றும் பழ மர கன்றுகள் வழங்கப்பட்டதுடன். அவர்களின் பெயரில் வங்கிக் கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டு வங்கிகணக்கு புத்தகங்கள் அவர்களிடம் கையளிக்கப்பட்டன.

யாழ் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியின் ஒத்துழைப்புடன் கட்சி அலுவலகத்தில் இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு இரத்ததானம் வழங்கப்பட்டது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply