யாழில் ஊடரங்கு நேரம் குறைப்பு; வீதிகளும் திறப்பு

யாழில் ஊடரங்குச் சட்டம் பிறப்பிக்கப்படும் நேரம் குறைக்கப்பட்டு, மூடப்பட்டிருந்த வீதிகள் பொதுமக்கள் பாவனைக்காகத் திறந்துவிடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ் குடாநாட்டில் ஊடரங்குச் சட்டத்தை முழுமையாக நீக்குவதற்கு இணக்கம் காணப்பட்டாலும், தற்பொழுது நிலவும் சமூகச் சீர்கேடுகளைக் கருத்தில் கொண்டு இரவு 11 மணிமுதல் இரவு 4 மணிவரை ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த இணங்கப்பட்டது.

தற்பொழுது யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்கும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலன்புரித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் அரசாங்க அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் நடைபெற்ற கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

யாழ் குடாநாட்டிலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்லும்போது காணப்படும் வீதித் தடைகள் மற்றும் பாஸ் நடைமுறைகள் போன்ற பிரச்சினைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இதற்கமையப் பாதுகாப்புத் தரப்பினரால் மூடப்பட்டிருக்கும் யாழ் நகரிலுள்ள சில முக்கிய வீதிகள் உள்ளிட்ட வீதிகளை மக்கள் பாவனைக்குத் திறந்துவிடுவதற்கு முடிவுசெய்யப்பட்டது.

இராணுவத்தினரின் வாகனத் தொடரணிகள் செல்லும்போது ஏற்படுத்தப்படும் வீதித் தடைகளை நீக்கி மாற்று ஏற்பாடுகள் செய்வதற்கும், யாழ்ப்பாணத்திலிருந்து பிற மாவட்டங்களுக்குச் செல்பவர்களுக்கான பாஸ் நடைமுறையில் காணப்படும் காலதாமதங்களை நிவர்த்தி செய்வது குறித்த ஆலோசித்து நடவடிக்கை எடுப்பதற்கும் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply