யாழ் குடாநாட்டில் முழுமையான ஹர்த்தால்
காங்கேசன்துறை துறைமுகத்தில் விடுதலைப் புலிகளால் கப்பல் மூழ்கடிக்கப்பட்டமையைக் கண்டித்து யாழ் குடாநாட்டில் கடையடைப்பு அனுஷ்டிக்கப்படுகிறது.
ஈ.பி.டி.பி.யினர் விடுத்த கோரிக்கைக்கு அமையவே குடாநாட்டில் கடையடைப்பு அனுஷ்டிக்கப்படுகிறது. யாழ் குடாநாட்டிலுள்ள கடைகள், அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டு வீதிகளில் போக்குவரத்து நடைபெறவில்லையென யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன. பாடசாலைகளில் மாணவர்களின் வரவு மிகவும் குறைந்தே காணப்படுவதாகவும், தனியார் மற்றும் போக்குவரத்துச் சபையின் போக்குவரத்துக்கள் இடம் பெறவில்லையென காணப்படுவதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.
நேற்று புதன்கிழமை அதிகாலை காங்கேசன்துறை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த சரக்குக் கப்பலான நிமல்லவ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டிருந்ததுடன், றுகுணு கப்பல் சேதமடைந்திருந்தது. இந்தச் சம்பவத்தைக் கண்டித்து இன்று கடையடைப்பு அனுஷ்டிக்குமாறு ஈ.பி.டி.பி.யினர் நேற்றுமாலை அறிவித்திருந்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திResponses are currently closed, but you can trackback from your own site.