`நாடு கடந்த தமிழீழ அரசு` தொடர்பாக எம்முடன் ஆலோசிக்கப்படவில்லை
ஸ்ரீகாந்தாவைத் தொடர்ந்து மாவையும் நிராகரிப்பு
‘நாடு கடந்த தமிழீழம்` ஒன்று தொடர்பாகவோ அல்லது அவ்வாறான `நாடு கடந்த அரசு` ஒன்றை அமைப்பதன் அடிப்படை உண்மை தொடர்பாவோ புலிகளின் சர்வதேசப் பிரிவினர் இலங்கையிலுள்ள தமிழர்கள் எவருடனும் கலந்து ஆலோசிக்கப்பட வில்லையென்ற செய்தி அம்பலமாகி உள்ளது. இதனை, ஸ்ரீகாந்தாவைத் அடுத்து, மாவை சேனாதிராஜாவும் கொழும்பிலுள்ள ஆங்கில ஊடகமொன்றுக்கு உறுதிப்படுத்தி உள்ளார்.
எம்முடன் `நாடு கடந்த தமிழிழ அரசு` தொடர்பாக ஆலோசிக்கப்படவில்லை. இவ்வாறான அரசாங்கம் குறித்து நாம் ஊடகங்கள் வாயிலாகவே அறிந்துகொண்டோம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கூறினார்.
“நாடு கடந்த தமிழீழ அரசு” என்ற விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எந்தச் சம்பந்தமும் கிடையாது. `நாடு கடந்த தமிழீழ அரசு` என்ற பெயரில் வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பு ஆச்சரியம் அளிக்கின்றது. இந்த நடவடிக்கையுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவொரு விதத்திலும் தொடர்புபட மாட்டாது. எவரும் எந்தவொரு நிகழ்ச்சி நிரலையும் எம்மீது திணிக்க முடியாது என்று யாழ்ப்பாணம் நாடாளுமன்ற உறுப்பினர், சட்டத்தரணி, என். ஸ்ரீகாந்தா ஜூன் 18 அன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு ஒன்றில் தெரிவித்திருந்தார்.
`நாடு கடந்த தமிழீழ அரசு` தமிழர்களுக்கு உதவி வழங்கும் வகையில் அமைந்திருக்குமா எனக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த மாவை சேனாதிராஜா, இது பற்றி தற்பொழுது கருத்துக் கூறமுடியாது எனவும், அவர்களின் செயற்பாடுகள் குறித்த அறிக்கைகள் வெளியான பின்னரே இது பற்றி கூறமுடியுமெனவும் தெரிவித்துள்ளார்.
இதற்காக புலிகளின் சட்ட ஆலோசகர்களில் ஒருவராகவிருந்த அமெரிக்க பிரஜையான விஸ்வநாதன் உருத்திரகுமாரன் தலைமையில் செயற்குழு இலங்கையிலுள்ள தமிழர்கள் எவருடனும் கலந்து ஆலோசிக்கப்பட வில்லையென செய்தி அம்பலமாகி உள்ளது.
அதேநேரம், கே.பி.யின் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கனவிலேயே அமைக்கப்படுமென இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகம அண்மையில் கூறியிருந்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply