சன்டேலீடர் சார்பில் சட்டத்தரணிகள் மன்னிப்புக் கோரினாலும் மக்கள் மத்தியில் நான் குற்றவாளி அல்ல என்பதை நிருபித்தல் அவசியம்

`மிக் 27 தாக்குதல் விமான கொள்வனவு` குறித்து அவதூறான செய்தி வெளியிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட சன்டேலீடர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் தமது  தவறுக்காக மன்னிப்புக் கோரினாலும் மக்கள் மத்தியில் நான் குற்றவாளி அல்ல என்பதை நிருபிக்கவேண்டியது அவசியமென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 30வது வருட யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு எதிரான வழக்கில் ஆஜராவது அவருக்கு செய்யும் மற்றுமொரு அவதூறு என சன்டேலீடர் சார்பில் ஆஜரான சட்டத்திரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

மிக் 27 தாக்குதல் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டத்தில் முறைக்கேடுகள் நடைபெற்றுள்ளதாக சன்டே லீடர் பத்திரிகையில் வெளியான அவதூறான செய்தி காரணமாக தனது அவப்பெயர் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் 100 கோடி ரூபா இழப்பீடு கோரி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, கல்கிஸ்சை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த, வழக்கில் இருந்து, சன்டேலீடர் சார்பில் ஆஜராகிய சகல சட்டத்தரணிகளும் இன்று விலகிக் கொண்டுள்ளனர்.

இந்த வழக்கில் ஆஜராகி சாட்சியமளிக்கும் நோக்கில், கோத்தபாய ராஜபக்ஷ கல்கிஸ்சை நீதிதமன்றத்திற்கு சென்றிருந்தார். அவர் முன்னிலையிலேயே, சன்டே லீடர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் இதனை குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் பாதுகாப்பு செயலாளரிடம் மன்னிப்புக் கோரி பத்திரிகை விளம்பரம் ஒன்றை வெளியிடவும் தாம் விரும்புவதாக அவர்கள் நீதிமன்றத்தின் முன்னிலையில் கூறியுள்ளனர். இந்த வழக்கில் வேறு சட்டத்தரணிகளை நியமிப்பதற்காக மாவட்ட நீதிபதி அவகாசம் வழங்கியுள்ளார்.

இந்த நிலையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய சார்பில் ஆஜரான சட்டத்தரணி எம்.ஏ.எம்.அலி சபீர், மன்னிப்பு மாத்திரம் போதுமானதல்ல எனவும் மிக் கொள்வனவில் எந்த முறைக்கேடுகளும் இடம்பெறவில்லை என்பதை சகல ஆவணங்களுடன் ஒப்புவித்து, மக்கள் மத்தியில் தான் குற்றவாளி அல்ல என்பதை நிருபிக்கவேண்டியது அவசியம் எனவே, வழக்கை இணக்கத்துடன் முடித்து கொள்ள தமது தரப்பு விரும்பவில்லை என தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் வழக்கு விசாரணைகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : TELOnews


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply