ஊவா மாகாணசபை தேர்தலுக்கான வேட்பு மனு ஏற்பு இன்றுடன் பூர்த்தி
ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்று நண்பகல் 12.00 மணி வரை ஏற்கப்படவுள்ளதோடு இன்று பிற்பகல் தேர்தல் ஆணையாளர் தேர்தல் நடத்தப்படும் திகதியை அறிவிக்க உள்ளதாக தேர்தல் செயலகம் கூறியது.பதுளை மாவட்டத்திற்கு ஏழு அரசியல் கட்சிகள் வேட்பு மனுத் தாக்கல் செய்வதோடு மூன்று சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன. மொனராகலை மாவட்டத்திற்கு 4 கட்சிகளும் 3 சுயேச்சைக் குழுக்களும் நேற்று வரை வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நேற்று மொனராகலை மற்றும் பதுளை மாவட்டங்களுக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்தன. ஐ. ம. சு. கூட்டமைப்பு செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த் தலைமையிலான குழுவினர் வேட்பு மனுக்களை கையளித்தனர். அமைச்சர்களான ஆறுமுகம் தொண்டமான் டிலான் பெரேரா, வடிவேல் சுரேஷ் ஆகியோரும் இங்கு பிரசன்னமாகி யிருந்தனர்.
பதுளை மாவட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐ. தே. க. தேசிய மக்கள் நல முன்னணி, தேசப் பற்று மக்கள் முன்னணி, தேசிய அபிவிருத்தி முன்னணி மற்றும் ஐக்கிய சோசலிச கட்சி, மலையக மக்கள் முன்னணி என்பன வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளன. இது தவிர 3 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல் செயலகம் கூறியது,
பதுளை மாவட்டத்திற்கான ஐ. தே. க. வேட்பாளர் பட்டியலை கட்சி முதன்மை வேட்பாளர் உபாலி சமரவீர தாக்கல் செய்தார். ஐ. தே.க.வுடன் தொழிலாளர் தேசிய சங்கம், மேலக மக்கள் முன்னணி, இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி என்பன இணைந்து போட்டியிடுகின்றன.
மொனரகலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, தேசிய சுதந்திர முன்னணி, ஜே. வி. பி., ஐக்கிய சோசலிசக் கட்சி என்பனவும் 3 சுயேச்சைக் குழுக்களும் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்போ ஐ. தே. க. வோ முதலமைச்சர் வேட்பாளர் எவரையும் நியமிக்கவில்லை. இம்முறை தேர்தலில் ஐ. ம. சு. கூட்டமைப்பு முதலமைச்சர் வேட்பாளர் எவரையும் நியமிக்காது எனவும் கட்சி கூடி முதலமைச்சரை தெரிவுசெய்யும் என அமைச்சர் டளஸ் அலஹப் பெரும நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply