2016இல் 2.5 மில்லியன். உல்லாச பயணிகளை வரவழைப்பதே இலக்கு: ஜனாதிபதி
சுற்றுலாத்துறை மேம்பாடு தொடர்பான எமது இலக்கானது 2016ம் ஆண்டில் 2.5 மில்லியன் உல்லாசப் பிரயாணிகளை வரவழைப்பதாகும். அதனை அடைவதற்கான சகல நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்படுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.நாம் ஒரு வரலாற்று யுகத்தைக் கடந்து ள்ளோம். இது சுற்றுலாத்துறையின் ஒரு மைல்கல்லாக அமையவேண்டுமென தெரிவித் துள்ள ஜனாதிபதி, பயங்கரவாதம் ஒழிக்க ப்பட்ட பின்னர் நாட்டு மக்களின் ஆனந்தமயமான செயற்பாடுகளைக்காண முழு உல கமும் இலங்கைக்கு வரவேண்டுமெனவும் அழைப்பு விடுத்துள்ளார்.
பயங்கரவாதம் காரணமாக நாட்டை விட்டுச் சென்ற சகலரையும் தாய்நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்த நான், இப்போது இலங்கை மக்களின் ஆனந்த மயமான செயற்பாட் டைக் காண முழு உலகிற்கும் அழைப்பு விடுக்கின்றேன் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சுற்றுலாத் துறை தொடர்பான முக்கிய நிகழ்வொன்று நேற்று முன்தினம் கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வு க்காகச் செய்மதியூடாக உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித் ததாவது;
சுற்றுலாத்துறை மேம்பாடு சம்பந்தமாக மஹிந்த சிந்தனைக் கொள்கைத் திட்டத் தில் நாம் தெளிவுபடுத்தியுள்ளோம். இதற் கிணங்க இத்துறையை வளர்ச்சிப் போக் கில் இட்டுச் செல்வதற்கான திட்டம் தயாரிக்கப்படும். உல்லாசத்துறைக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைந்த பயங்கரவாதத்தை வெற்றிகொண்டுள்ள நாம் உல்லாசப் பயணத்துறை மேம்பாட்டுக்கான இலக்கை அடைவதற்கு முன்னோக்கிச் செல்லவேண்டியுள்ளது. மக்களுக்குப் புதிய பொருளாதார வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் சுற்றுலாத்துறை விரிவுபடுத்தப்படவேண்டும்.
இதனடிப்படையில், அம்பாந்தோட்டை, கற்பிட்டி மற்றும் அறுகம்பை போன்ற பிரதேசங்களை சுற்றுலா மையங்களாக அபிவிருத்தி செய்வதே எமது எதிர்பார்ப்பு. பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதையடுத்து கிழக்கில் பாசிக்குடா, திருகோணமலை தொடக்கம் கொக்கிளாய் களப்பு வரையான பிரதேசம், அதுபோன்று வடக்கின் முக்கிய இடங்கள் ஆகியனவும் சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு வலயத்திற்குள் இணைத்துக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் இப்போது கிட்டியுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply