அமெரிக்காவின் துணை அதிபராகும் கமலா ஹரிஸின் கணவருக்கு கிடைத்த அந்தஸ்து

அமெரிக்காவின் துணை அதிபராக பொறுப்பேற்க இருக்கும் கமலா ஹரிஷீன் கணவருக்கு நாட்டின் செகண்ட் ஜெண்டில்மேன் என்ற அந்தஸ்தை பெறவுள்ளார்.

அமெரிக்காவின் ஜனநாயக கட்சியின் முன்னாள் துணை அதிபரான ஜோ பைடன், சமீபத்தில் நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இவர் வெற்றியை தொடர்ந்து, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹரீஷ் துணை அதிபராக பொறுப்பு ஏற்கவுள்ளார்.

பொதுவாக, அமெரிக்க அதிபரின் மனைவி, நாட்டின் முதல் பெண்மணி என்றும், துணை அதிபரின் மனைவி, அமெரிக்காவின் இரண்டாம் பெண்மணி என்று அழைக்கப்படுவர்.

அதன்படி, தற்போதுள்ள அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மனைவி மெலனியா ட்ரம்ப், அமெரிக்க முதல் பெண்மணி என்றும், துணை அதிபர் மைக் பென்சின் மனைவி காரன் பென்ஸ், இரண்டாம் பெண்மணி என அழைக்கப்படுகின்றனர்.

அதன்படி, அதிபராக பொறுப்பேற்கவுள்ள ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன், நாட்டின் முதல் பெண்மணி என்ற அந்தஸ்தை பெறவுள்ளார்.

ஆனால், இம்முறை துணை அதிபராக பதவியேற்கும் கமலா ஹரிஸ், ஒரு பெண் என்பதால், அவரது கணவரான டக்லஸ் எம்ஹோப், அமெரிக்காவின் இரண்டாம் ஆண் எனப்படும், அதாவது செகண்ட் ஜென்டில்மேல் என்ற அந்தஸ்தை பெற உள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply