WHO விடமிருந்து இலங்கைக்கு ஒரு இலட்சம் உடனடி ஆண்டிபயாடிக் சோதனை கருவிகள்
கொவிட் தொற்றாளர்களை விரைவாக அடையாளம் காண்பதற்காக பயன்படுத்தப்படும் ´உடனடி ஆண்டிபயாடிக் சோதனை கருவிகள்´ ஒரு இலட்சம் உலக சுகாதார அமைப்பினால் இந்நாட்டிற்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதாக மருந்து உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
குறித்த கருவிகள் சுகாதார அமைச்சின், மருந்து விநியோக பிரிவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
குறித்த கருவிகள் தொகையை உத்தியோகபூர்வமாக இலங்கைக்கு வழங்கும் நிகழ்வு இன்று மாலை உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதியொருவரின் தலைமையில் இடம்பெறவுள்ளது.
Rapid Antigen Test என்ற முறை, கொரோனா வைரஸை இனங்காணும் புதிய முறையாகும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply