இந்த மாதத்தில் இதுவரை அமெரிக்காவில் 10 லட்சம் பேருக்கு தொற்று உறுதி

corona

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதித்த நாடு என்ற மோசமான சாதனையை அமெரிக்கா படைத்து இருக்கிறது. இங்கு பாதிப்பும், மரணங்களும் பிற நாடுகளை விட உச்சத்தில் உள்ளன. அங்கு 1 கோடிக்கு மேற்பட்டோர் கொரோனாவிடம் சிக்கி அதில் சுமார் 2.45 லட்சம் பேர் மரணத்தை தழுவி இருக்கின்றனர்.

கொரோனாவின் இத்தகைய கோரத்தாண்டவத்தில் மேலும் ஒரு வீரியமாக, இந்த மாத தொடக்கத்தில் இருந்து இதுவரை, அதாவது சுமார் 10 நாட்களில் மட்டும், அங்கு தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை மட்டும் 10 லட்சத்தை கடந்து இருக்கிறது. அதுவும் நேற்று முன்தினம் மட்டும் பல மாகாணங்களில் தினசரி பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது. இதில் இல்லினாயிஸ் மாகாணம் 12 ஆயிரத்துக்கு அதிகமான பாதிப்பையும், விஸ்கான்சின் மாகாணம் 7 ஆயிரத்துக்கு அதிகமான பாதிப்பையும் கண்டிருக்கிறது.

இதைப்போல கொரோனா மரணங்களை பொறுத்தவரையிலும், பல மாகாணங்கள் உச்சபட்ச பலி எண்ணிக்கையை பெற்று வருகின்றன. இப்படி கொரோனாவின் வீரியம் தொடர்ந்து நீடித்து வருவது அமெரிக்கர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply