பெட்ரோல், டீசல் கார்களை தடை செய்ய இங்கிலாந்து அரசு திட்டம்
காற்றில் பரவும் கார்பன்டை ஆக்சைடு அளவின் அதிகரிப்பு காரணமாக பருவ நிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே காற்றில் கார்பன்டை ஆக்சைடு கலப்பதை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கரும்புகையை வெளியிடும் பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருள் பயன்படுத்தும் கார்களை தடை செய்ய சர்வதேச நாடுகள் திட்டமிட்டுள்ளன.
இதற்கிடையே, இங்கிலாந்தில் 2040-ம் ஆண்டில் பெட்ரோல், டீசல் கார்களை முழுவதுமாக தடைசெய்வது என திட்டமிடப்பட்டு இருந்தது.
அந்தத் திட்டத்தை முன்கூட்டியே 2035-ம் ஆண்டில் இருந்து தடை செய்ய இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் முடிவு செய்தார். இப்போது அந்த முடிவை இன்னும் முன்கூட்டியே அவர் செய்ய திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
அதன்படி அடுத்த வாரம் 2030-ம் ஆண்டிற்குள் பெட்ரோல், டீசல் கார்களை இங்கிலாந்தில் முழுவதுமாக தடைசெய்வது என்ற அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்தில் எரிசக்தி மதிப்பீட்டின் ஒரு பகுதியாக, மின்சார கார் சந்தையை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை பிரதமர் போரிஸ் ஜான்சன் மேற்கொள்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது விற்பனையாகும் கார்கள் 73.6 சதவீதம் பெட்ரோல், டீசல் கார்களாக உள்ளன. 5.5% கார்கள் மட்டுமே மின்சார கார்கள் ஆக உள்ளன. மின்சார கார்களின் விலை மிகவும் அதிகம் என தொழில்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply